புனிதப் போருக்கு அழைப்பு விடுத்த பாஸல் இமாம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய முக்கிய மசூதி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் உள்ள முக்கிய மசூதியில் இமாம் ஒருவர் புனிதப் போருக்கு அழைப்பு விடுத்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சர்ச்சை கருத்தை அந்த மசூசியின் முக்கிய நிர்வாகி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாஸல் நகரில் செயல்பட்டுவரும் முக்கிய மசூதி கிங் பைசல். இந்த மசூதியிலேயே சிரியாவில் இருந்து வந்த இமாம் ஒருவர் புனிதப் போருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடவுளின் பாதையை பின்பற்ற ஜிஹாத் ஒரு நல்லொழுக்கம் என தெரிவித்துள்ள அவர்,

கடவுளிடம் நெருக்கமாக ஜிஹாத் ஒரு சிறந்த வழி எனவும் வெள்ளியன்று நடந்த ஆராதனையின்போது குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இமாம் அந்து பேசிய மொத்த கருத்துகளின் பொருள் கலவரம் மட்டுமே தீர்வு என உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் கிங் பைசல் மசூதியின் தலைமை நிர்வாகி நாபில் அரப் குறித்த தகவலை முற்றாக மறுத்துள்ளார்.

மேலும், வரலாற்றில் நடந்த ஒரு புனிதப் போரை குறிப்பிட்டு அந்த இமாம் பேசியதாகவும், ஆனால் அது திரித்து செய்தி வெளியிடப்பட்டதாகவும் நாபில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாஸல் நகரில் அமைந்துள்ள கிங் பைசல் மசூதியானது நீண்ட காலமாக சுவிஸ் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்