20 ஆண்டு கால காதல் வாழ்க்கை, காணாமல் போன திருமண மோதிரங்கள்: காதல் கணவர் செய்த செயல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

20 ஆண்டு காலம் காதல் வாழ்க்கை வாழ்ந்த ஜெனீவாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், தொலைந்த திருமண மோதிரங்களை மெட்டல் டிடெக்டர் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் Veronique என்னும் அந்த பெண் Fribourgஇல் பூக்களைப் பறிக்கச் சென்றார்.

வீடு திரும்பிய பிறகுதான், தான் விரல்களில் அணிந்திருந்த தனது திருமண மற்றும் நிச்சயதார்த்த மோதிரங்கள் தொலைந்து விட்டிருந்தது அவருக்கு தெரியவந்தது.

20 ஆண்டு கால காதல் வாழ்க்கையின் அடையாளமாக தான் பத்திரமாக வைத்திருந்த மோதிரங்கள் காணாமல் போனது Veroniqueஐ மிகவும் வருத்தமடையச் செய்தது.

மோதிரங்கள் காணாமல் போய் ஐந்து ஆண்டுகள் ஆகியும் Veronique கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது கணவர் Michel (50), கடைசியாக ஒரு முறை மோதிரங்களை தேடிப்பார்த்து விடுவது என முடிவு செய்தார்.

மெட்டல் டிடெக்டர் ஒன்றை வாங்கி வந்த Michel, தொடர்ந்து மோதிரங்களை தேட ஆரம்பித்தார்.

சில நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு, திராட்சைத் தோட்டம் ஒன்றில் ஒரு மீற்றர் இடைவெளியில் இரண்டு மோதிரங்களையும் அவர் கண்டு பிடித்துள்ளார்.

கணவனும் மனைவியும் மோதிரம் கிடைத்ததை பார்ட்டி வைத்துக் கொண்டாடுகிறார்கள். மோதிரம் கிடைத்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போயுள்ள Veronique, என் கணவர் அருமையானவர் என்கிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers