அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

ஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன்அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் மூன்றாம் நாள் திருமுறை திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

கதிரவேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை (17.05.2019) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ஆலய பெருந்திருவிழாவில் மூன்றாம்நாள் (19.05.2019) திருமுறை திருவிழா பக்திபூர்வமாக நடைபெற்றது.

ஆலயத்தில் விசேடஅபிசேகம் மற்றும் பூசைகள் இடம்பெற்று கதிர்வேலர் சக்திரூபக்காட்சி கொடுத்தார்.

கதிர்வேலருக்கு முன்பாக திருமுறைகளை உலகிற்கு தந்த சம்பந்தர்,அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர் ஆகியோரின் திருவுருவப் படங்கள் அடியார்களால் தாங்கி வரப்பட்டது.

உள்வீதியில் ஆன்மீகவாதி நல்லதம்பி சரவணப்பெருமாள் தலைமையில் திருமுறைபாராயணம் பக்திபூர்வமாக இடமபெற்றது. ஆசிரியை குணாளன் சங்கரி மற்றும் அடியார்களும் திருமுறை பாராயணம் செய்தனர்.

பெருந்திருவிழாவில் நான்காம் நாள் (20.05.2019) விசேடஅபிசேகம் மற்றும் பூசைகளைத் தொடர்ந்து குருந்தமரத்திருவிழா பக்திபூர்வமாக இடமபெற்றது. குருந்துமர நிழலில் கதிர்வேலர் அருட்காட்சி தந்தார்.

அண்டை நாடான ஜேர்மனியில் வாழும் இந்தியா,இலங்கை அடியார்கள் இணைந்து இத்திருவிழாவை சிறப்பாக நடத்தினர்.

லண்டனிலிருந்து வருகைதந்துள்ள சிவாகமரத்னம், வேதாகம விசாரதா ந.ராமு(எ)அகத்தீஸ்வரக்குருக்கள், ஆலயபிரதமகுரு சிவாகமரத்னம், கிரியா கலாமணி முத்து மீனாட்சிசுந்தரம் முத்துச்சாமிக்குருக்கள், யாழ்.சுன்னாகம் கதிரமலை சிவன்கோவிலைச் சேர்ந்த சிவாச்சாரிய ரத்னம் சிவஸ்ரீ சோம சிறிகரக்குருக்கள் ஆகியோர் பெருந்திருவிழாவை சிறப்பாக நடத்திவருகின்றனர்.

செங்காலன் நாதசுர வித்துவான் மா.செந்துரன் தலைமையில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள தவில் வித்துவான் மு.நாகேந்திரம் மற்றும் நாதசுர வித்துவான் குணதாஸ் மோகனதாஸ், தவில் வித்துவான் சுதா கோபி ஆகியோரின் மங்கள இசை சிறப்பாக இடம்பெற்றது.

பெருந்திருவிழாவில் 5 ஆம் திருவிழா (21.05.2019) கப்பல் திருவிழாவாகவும், 6 ஆம் திருவிழா (22.05.2019) மாம்பழத் திருவிழாவாகவும 7 ஆம் திருவிழா (23.05.2019) வேட்டைத்திருவிழாவாகவும், 8 ஆம் திருவிழா (24.05.2019) சப்பறத்திருவிழாவாகவும் நடைபெற்று சனிக்கிழமை (25.05.2019) காலை 07.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி கதிர்வேலர் தேரில் பவனி வரவிருக்கிறார்.

அடுத்தநாள் தீர்த்தத்திருவிழா நடைபெற்று அன்று மாலை 17.30 மணிக்கு ஊஞ்சல்பாட்டு கொடியிறக்கம் நடைபெறவிருக்கின்றன.

மறுநாள் திங்களன்று திருக்கல்யாணமும் செவ்வாயன்று வைரவர்மடையும் நடைபெறவிருக்கின்றன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers