2 மாதங்களாக நீடித்த மர்மம்.. சுவிஸில் காணாமல் போன தாய், குழந்தை விடயத்தில் திருப்பம்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் காணாமல் போன பெண்ணும், அவருடைய குழந்தையும் விடயத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சூரிச்,Glattpark பகுதியில் கணவனை பிரிந்த ஜேர்மனி பெண், தனது 7 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் தன் மகனை பார்க்க கணவர் சூரிச் நகரில் உள்ள தனது முன்னாள் மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, வீடு பூட்டப்பட்டிருந்துள்ளது, பல மணி நேரம் காத்திருந்தும் இருவரும் வரவில்லை. எனவே, காவல் நிலையத்திற்கு சென்ற கணவர் புகார் அளித்துள்ளார். மேலும், இருவரும் ஜேர்மனி அல்லது ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருக்கலாம் என பொலிசில் தகவல் அளித்துள்ளார்.

பொலிசார் இருவரையும் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,கடந்த பிப்ரவரி மாதம் அப்பெண் அப்பகுதியை சேர்ந்த நபரிடம், தாங்கள் விடுமுறைக்காக ஜேர்மனி செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இருவரும் ஜேர்மனியில் இருப்பதை உறுதி செய்த பொலிசார், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட தாயும், மகனும் பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers