இலங்கையில் நடக்க இருந்த அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் தொடர்பான மாநாடு இடமாற்றம்: சுவிட்சர்லாந்து!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஐக்கிய நாடுகள் சபையின் அழிவின் விழிம்பில் இருக்கும் உயிரினங்கள் தொடர்பான 18ஆவது மாநாடு (CITES) இம்மாதம் (மே மாதம்) 23ஆம் திகதி இலங்கையில் தொடங்குவதாக திட்டமிட்டிருந்த நிலையில், இலங்கை வெடி குண்டு தாக்குதல்கள் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது.

ஆனால் அடுத்து அந்த மாநாடு எங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்து எந்த அறிவிப்பையும் CITES கமிட்டி இதுவரை அறிவிக்கவில்லை.

இதனால் சுவிட்சர்லாந்தை மையமாக கொண்ட உலக வளங்கள் பாதுகாப்பு தொண்டு நிறுவனமான IWMCயும், அமெரிக்காவை மையமாகக் கொண்ட IEI என்னும் கல்வி நிறுவனமும், CITES கமிட்டி தலைவரான கனடாவின் Ms Carolina Caceresக்கு தனித்தனியே கடிதம் எழுதி, மாநாடு எங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.

உலக நாடுகள் அழிவின் விளிம்பிலிருக்கும் உயிரினங்களைக் காக்கும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றவேண்டுமானால் அது தொடர்பான 18ஆவது மாநாடு விரைவில் நடத்தப்பட வேண்டும் என்கிறார் Ivory Education Instituteஇன் நிர்வாக இயக்குநரான Godfrey Harris.

அது மட்டுமின்றி, அவசர விடயங்கள் தொடர்பில் விரைந்து செயல்பட வேண்டும் என்று அழிவின் விழிம்பில் இருக்கும் உயிரினங்கள் தொடர்பான ஒப்பந்தம் கூறுகிறது.

இலங்கையில் காணப்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் அவசரமான விடயம். எனவே ஜூன் மாதத்தில் கூடி மாநாட்டுக்கான புதிய திகதி குறித்து அறிவிக்க ஏண்டும் என IWMC பரிந்துரைத்துள்ளது.

அதேபோல் IWMC மற்றும் IEI இரண்டுமே, 18ஆவது மாநாடு இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers