சுவிட்சர்லாந்தில் பெண் மருத்துவர் கைது: சட்ட விரோதமாக கடத்தப்பட்ட மருத்துவ கருவிகள் பறிமுதல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சூரிச்சில் முறையான உரிமம் இன்றி பணியாற்றிய பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செர்பியாவைச் சேர்ந்த அந்த பெண்ணை விசாரித்தபோது அவரிடம் சுவிட்சர்லாந்தில் பணியாற்ற முறையான பணி உரிமமும் இல்லாதிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

35 வயதான அந்த பெண், ஊசிகளைப் பயன்படுத்தி செய்யும் அழகியல் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

பொலிசார் அவரது உதவியாளராக செயல்பட்ட 29 வயது நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

நாட்டுக்குள் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட மருத்துவ கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளதாக சூரிச் பொலிசார் தெரிவித்தனர்.

அந்த பெண், மருத்துவமனை நடத்தி வந்த கட்டிடத்தின் உரிமையாளரையும் பொலிசார் விசாரணைக்குட்படுத்தினர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers