தேர்தலில் ஊழியர் செய்த தில்லு முல்லு: பொலிஸ் விசாரணை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

தேர்தல் அலுவலக ஊழியர் ஒருவர் தேர்தலில் தில்லு முல்லு செய்திருக்கலாம் என்று புகார்கள் வந்துள்ளதையடுத்து ஜெனீவாவில் பொலிஸ் விசாரணை தொடங்கியுள்ளது.

தேர்தல் அலுவலக ஊழியர் ஒருவர் தேர்தலில் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்ததையடுத்து ஜெனீவா தேர்தல் அலுவலகங்களில் பொலிசார் சோதனையிட்டதாக பிரபல சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை பின்னர் ஜெனீவா அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று உறுதி செய்துள்ளது.

தேர்தல் அலுவலக ஊழியர் ஒருவர் தங்கள் சக ஊழியர் ஒருவர் குறித்து புகார் ஒன்றை அளித்தனர்.

சில வாக்குச்சீட்டுகளை கிழித்து போட்டு விட்டு அதற்கு பதில் வேறு சில வாக்குச்சீட்டுகளை அவர் சேர்த்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியால் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தல்கள் உட்பட பல தேர்தல்களின் முடிவுகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் அந்த ஊழியர் ஜெனீவா பொலிசாரால் விசாரிக்கப்பட்ட நிலையில், தேர்தல் மோசடி தொடர்பான அரசு வழக்கறிஞரின் விசாரணை தொடர்கிறது.

சுவிட்சர்லாந்தில் தேர்தல் மோசடி தொடர்பான வழக்குகள் வெகு அபூர்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers