இளம் பெண்ணின் மொபைல் எண்ணை தெரிந்து கொள்ள 2600 பிராங்குகள் செலவிட்ட நபர்: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் தமக்காக வாதிட வந்த இளம் வழக்குரைஞர் மீது காதல் வயப்பட்டு சிறைக்கு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பாஸல் மண்டலத்தில் குடியிருந்து வருபவர் 33 வயதான அந்த நபர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தன்மீதான வழக்கை எதிர்கொள்ள சட்ட உதவி கோரி தொடர்புடைய நிறுவனம் ஒன்றை அணுகியுள்ளார்.

சாலை விதிகளை மீறுதல், பொருட்களை சேதப் படுத்துதல் உள்ளிட்ட பல வழக்குகள் இவர் மீது பதியப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தொடர்புடைய சட்ட நிறுவனம் இவருக்காக வாதாட ஒரு இளம் வழக்குரைஞரை அனுப்பியுள்ளது.

ஆனால் அந்த பெண் வழக்குரைஞரின் அழகிலும் திறமையிலும் இவர் தமது மனதை பறிகொடுத்துள்ளார்.

தொடர்ந்து அவரது சொந்த மின் அஞ்சல் முகவரிக்கு தமது காதலை குறிப்பிட்டு இவர் கடிதங்கள் பல அனுப்பியுள்ளார்.

மட்டுமின்றி குறித்த வழக்குரைஞரின் அலுவலகத்திற்கு தினமும் நறுமண பூக்களையும் காதலின் அடையாளமாக அனுப்பி வந்துள்ளார்.

மேலும் அவரது மொபைல் எண்ணை தெரிந்துகொள்ள குறித்த சட்ட உதவி நிறுவனத்தில் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

ஆனால் இதை கொஞ்சமும் ரசிக்காத அந்த இளம் வழக்குரைஞர், தமது எதிர்ப்பையும் அவரிடம் பதிவு செய்துள்ளார்.

இதில் மனம் தளராத அந்த நபர் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி, திருமண கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஆனால் இதற்கும் ஒப்புக்கொள்ளாத அந்த வழக்குரைஞர் மீது கோபமாக மின் அஞ்சல் அனுப்பியுள்ளார், பின்னர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், அந்த வழக்குரைஞர் இளம்பெண், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் குறித்த சட்ட உதவி நிறுவனத்தில், தாம் செலுத்திய 2600 பிராங்குகள் கட்டணத்தை திரும்ப வழங்கும்படி மிரட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த நபர் அடுத்த நாளில் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் அந்த இளம் வழக்குரைஞரை மறக்க முடியாத அந்த நபர், தொடர்ந்து தொல்லை அளித்து வந்துள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கடந்த அக்டோபர் மாதம் சிறைக்குள் தமது அறையில் வைத்து தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், இளம் வழக்குரைஞரின் தரப்பு அவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை கோரியுள்ளது.

ஆனால் அவரது தரப்பு இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்