சுவிட்சர்லாந்தில் இன்னொரு ட்ரோன் விபத்து: ட்ரோன் சேவை நிறுத்தம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

மருத்துவ பொருட்களை அனுப்பும் சேவையில் ஈடுபட்டிருந்த ட்ரோன் ஒன்று விழுந்து நொறுங்கியதையடுத்து சுவிஸ் ட்ரோன் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ பொருட்களை அனுப்பும் சேவையில் ஈடுபட்டிருந்த ட்ரோன் ஒன்று நேற்று சூரிச் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

நான்கு மாதங்களில் இது இரண்டாவது ட்ரோன் விபத்தாகும்.

என்றாலும் இந்த ட்ரோன் எந்த பொருட்களையும் சுமந்து செல்லவில்லை. 10 கிலோ எடையுள்ள அந்த ட்ரோன், நேற்று காலை 11 மணியளவில் விழுந்து நொறுங்கியதாக சூரிச் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சுவிஸ் தபால் ஊழியர்களும், பொலிசாரும் மோசமாக சேதமடைந்திருந்த அந்த ட்ரோனை மீட்டனர்.

அந்த ட்ரோன் சூரிச் பல்கலைக்கழகத்திலிருந்து பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இரண்டாவது முறையாக பொருட்களை சுமந்து செல்லும் ட்ரோன் ஒன்று விபத்துக்குள்ளானதையடுத்து, பாதுகாப்பு கருதி, சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையிலிருந்து Lugano மருத்துவமனைக்கு ட்ரோன் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜனவரி மாதம் 25ஆம் திகதி, இரத்த மாதிரி ஒன்றை சுமந்து சென்ற ட்ரோன் ஒன்று சூரிச் ஏரியில் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்