பயணிகள் உயிரை காப்பாற்ற... தன் உயிரை துச்சமாக விட்ட ஹீரோ: நெகிழ வைக்கும் சம்பவம்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மினிபஸ் ஓட்டுனர் ஒருவர் விபத்தின் போது தன் உயிரை கொடுத்து குழந்தை உள்ளிட்ட பயணிகள் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

பெர்ன் நகரின் Neuenegg பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியிலே இவ்விபத்து நடந்துள்ளது. காட்டுப்பகுதியில் குழந்தை மற்றும் பயணிகளுடன் மினிபஸ் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் தீடீரென சாலையின் நடுவே மரம் சாய்ந்து கிடந்துள்ளது.

இதை கண்டு சுதாரித்துக்கொண்ட ஓட்டுனர், வாகனத்தை முடிந்தவரை கட்டுப்படுத்தி மரத்தில் மோதியுள்ளார். இந்த விபத்தில் சிக்கி ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாகவும். வாகனத்தில் பயணித்த குழந்தை உட்பட பயணிகள் நலமாக உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், விபத்தில் சிக்கி உயிரிழந்த ஓட்டுனரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறது. விபத்து பற்றிய சூழ்நிலைகளை தெளிவுபடுத்துவதற்கு விசாரணை தொடங்கியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்