சுவிட்சர்லாந்தில் காலையில் கதவைத் திறந்தவர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் நேற்று காலை கண் விழித்து கதவைத் திறந்த சிலர் ஆச்சரியத்தில் திகைத்துப்போனார்கள்.

இது கோடைக்காலமா அல்லது குளிர்காலமா என்று கேட்கும் அளவிற்கு பனி பொழிந்திருந்தது.

சுவிஸ் தலைநகரமான பெர்னில் நான்கு சென்றிமீற்றர்கள் அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை பனி பெய்தது.

இதற்குமுன் 1945ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதிதான் இதேபோல் புதிய பனிப்பொழிவு நிகழ்ந்தது.

கடல் மட்டத்திலிருந்து 669 மீற்றர்கள் உயரத்தில் இருக்கும் கிழக்கு நகரமாகிய St Gallenஇல் 19 சென்றிமீற்றர் அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.

இந்த வாரம், பனியின் பாதிப்பு இருக்கும் என்ற எச்சரிக்கையுடன் தொடங்கியுள்ளது.

பெர்னில் வெப்பநிலை –2.3C ஆகவும் Vaudஇலுள்ள Mathodஇல் –2.6C ஆகவும் இருந்தது.

அதிகபட்சமாக திங்கட்கிழமை ஜெனீவாவில் வெப்பநிலை 13C ஆகவும் பெர்னிலும் சூரிச்சிலும் 10C ஆகவும் St Gallenஇல் 7C ஆகவும் இருக்கும் என்றும் Ticinoவில் 17C ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers