சுவிஸ் பெண்மணி கொலை வழக்கில் வெளிநாட்டு இளைஞர் கைது: முக்கிய ஆதாரம் சிக்கியது

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கொலை வழக்கு தொடர்பில் 28 வயதான குரோஷிய நாட்டவரை மண்டல பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கத்தி ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் 66 வயது ஹில்டகார்ட் ரிவோலா என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டார்.

இந்த நிலையில் மண்டல பொலிசார் 28 வயதான குரோஷிய இளைஞரை கைது செய்துள்ளனர். மட்டுமின்றி, அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தி ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

ஆனால் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்து வரும் குறித்த இளைஞரை அடுத்த ஆறு மாதம் விசாரணை கைதியாக வைத்திருக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கொலை வழக்கு தொடர்பில் பலமுறை விசாரணை மேற்கொண்டும், அந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் பொலிஸ் தரப்பின் அனைத்து சாட்சியங்களும் ஆதாரங்களும் அவருக்கு எதிராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி குறித்த இளைஞர் தொடர்பில் உளவியல் அறிக்கை ஒன்றையும் கோரியுள்ள நிலையில், அதற்கான கால தாமதம் ஏற்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers