ஆபாச விளையாட்டின்போது உயிரிழந்த பிரித்தானிய இளம்பெண்: புகைப்படங்கள் வெளியானது!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிரித்தானிய இளம்பெண் ஒருவர் சுவிஸ் ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததையடுத்து, ஜேர்மானியரான அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Anna Florence Reed (22), சுவிட்சர்லாந்தின் Locarno பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தனது ஆண் நண்பருடன் தங்கியுள்ளார்.

அவர் இறப்பதற்கு முந்தைய இரவு அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து பயங்கர சத்தம் கேட்டதை அக்கம் பக்கத்து அறையினர் கேட்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் அளித்திருக்கிறார்கள்.

மறுநாள் காலையில் Anna பாத்ரூமில் இறந்து கிடந்ததைக் கண்ட ஊழியர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசாருடன் வந்த மருத்துவ உதவிக்குழுவினர், அவர் இறந்து விட்டதை உறுதி செய்துள்ளனர்.

பொலிசார் Annaவின் ஆண் நண்பரை கைது செய்து விசாரித்தபோது, வித்தியாசமாக பாலுறவு கொள்ளும் ஒரு விளையாட்டின்போது தவறு ஏற்பட்டு, Anna இறந்து போனதாக அவர் தெரிவித்துள்ளார்.

உடற்கூறு பரிசோதனையில், Anna மூச்சுத்திணறல் ஏற்பட்டு அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழந்துள்ளதும், அவரது எலும்புகள் சில முறிந்துள்ளதும், உடலில் கீறல்களும் காணப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதை கொலையாக பதிவு செய்துள்ள சுவிஸ் பொலிசார், 29 வயதுள்ள அந்த ஆண் நண்பரை கைது செய்துள்ளதோடு, பிரித்தானியாவுக்கும் தகவல் அளித்துள்ளனர்.


மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers