மணவர்களுடன் ஆசிரியர் ஆபாச சேட்... பலருடன் பாலியல் சேட்டை: சுவிஸை உலுக்கிய சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஒருவர் தமது மாணவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியைச் சேர்ந்த 38 வயது மேல்நிலை பள்ளி ஆசிரியரே குறித்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.

இவர் கடந்த 2003 முதல் 2013 ஆம் ஆண்டுவரையான காலகட்டத்தில் மாணவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

மாணவர்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியது மட்டுமின்றி, அந்த மாணவர்களுக்கு ஆபாச காட்சிகள் கொண்ட படங்களையும் வலுக்கட்டாயமாக பகிர்ந்துள்ளார்.

மாணவர்களுடன் இணையத்தளம் வாயிலாக சேட் செய்வதை வழக்கமாக கொண்ட இவர், அவர்களுடன் ஆபாசமாக பேசுவதையும், அந்த மாணவர்களை தமது ஆசைக்கு இணங்க வைப்பதையும் வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.

மட்டுமின்றி அந்த சிறுவர்களை ஆபாச செய்கைகளை மேற்கொள்ளவும் தூண்டியுள்ளார். பெரும்பாலான சிறுவர்கள் கட்டாயத்தின்பேரிலேயே அந்த ஆசிரியருக்கு வழங்கியுள்ளனர்.

மேலும், பதிவு செய்த வீடியோ காட்சிகள் மற்றும் படங்களை வெளியிடுவதாக மிரட்டி தமது இச்சைகளுக்கு அந்த மாணவர்களை இரையாக்கியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த ஆசிரியரின் குடியிருப்பை சோதனையிட்ட பொலிசார் அவரிடம் இருந்து சுமார் 47,000 சிறார் ஆபாச புகைப்படங்களையும் 5,000 ஆபாச வீடியோ பதிவுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தை உலுக்கிய இந்த விவகாரம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை பகல் 8.15 மணிக்கு பாஸல் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்