மாயமான சுவிஸ் பெண்மணி தொடர்பில் நீடிக்கும் மர்மம்: பொதுமக்கள் உதவ பொலிஸ் கோரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இருந்து மாயமான 36 வயது பெண் தொடர்பில் மர்மம் நீடிப்பதாகவும், பொதுமக்கள் உதவ வேண்டும் எனவும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் கடந்த மார்ச் 18 ஆம் திகதியில் இருந்து Sarah Pfister என்ற 36 வயது பெண் மாயமானார்.

பணிக்கு சென்ற அவர் அதன் பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூகவலைதளங்களிலும் சாராவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர் குறித்த தகவலை பகிர்ந்து உதவ கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே இத்தாலிய ஊடகம் ஒன்று மாயமான சாரா தொடர்பில் நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப தகவல் தேடி சூரிச் வந்துள்ளது.

இதனால் சாராவின் குடும்பத்தினர், அவர் இத்தாலியில் இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சாரா மாயமானது தங்களுக்கு வருத்தமாகவே உள்ளது எனக் கூறும் அவரது தோழிகள், ஆனால் அவருக்கு கெட்டது ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே நம்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.

சாரா தொடர்பில் இதுவரை புதிதான எந்த தகவலும் இல்லை என கூறும் சூரிச் நகர பொலிசார்,

சாரா குறித்த தகவல் ஏதும் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...