சுவிட்சர்லாந்தில் ஒரு நவீன ராபின் ஹூட்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பணக்காரர்களிடம் திருடி ஏழைகளுக்கு கொடுத்த ராபின் ஹூட் கதை பலருக்கும் தெரிந்திருக்கும்.

சுவிட்சர்லாந்தில் ஒரு நவீன ராபின் ஹூட் சிக்கியிருக்கிறார். அவர் ஒரு முன்னாள் பொலிஸ்காரர்.

தவறான இடத்தில் பார்க் செய்யப்படும் வாகனங்களுக்காக வாங்கும் அபராதத்தை அவர் திருடியிருக்கிறார்.

சூரிச்சை சேர்ந்த அந்த பொலிஸ்காரர், அந்த பணத்தை தேவையிலிருக்கும் ஏழைகளுக்கு கொடுத்ததாக கூறியிருக்கிறார்.

ஆனால் அவர் அந்த பணத்தை வரி கட்டுவதற்கும், விவாகரத்து செய்த தன் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்கும் பயன்படுத்தியதாக பின்னர் ஒப்புக்கொண்டார்.

2014இல் இருந்து அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

அப்படி அவர் 144,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை ஏமாற்றியிருக்கிறார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதோடு, தான் செலவு செய்த தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...