நேருக்குநேர் மோதிக்கொண்ட சுவிஸ் போர் விமானங்கள்: விசாரணையில் வெளியான தகவல்

Report Print Vijay Amburore in சுவிற்சர்லாந்து

நெதர்லாந்தில் கடந்த 2016ம் ஆண்டு இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட சம்பவத்தில் விமானியின் பிழை ஏற்பட்டிருப்பதாக ராணுவ புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 9, 2016 அன்று, வானூர்தி பயிற்சி பெற்ற இரண்டு F-5 பேட்ரூய்லி சுவிஸ் விமானம், ஆம்ஸ்டர்டாமின் வடக்கே சுமார் 150 கிலோமீட்டர் (90 மைல்கள்) தூரத்தில் லீவார்டன் பகுதியில் உள்ள வடக்கு டச்சு விமானத் தளத்திற்கு அருகே நேருக்குநேர் மோதியது.

ஒரு விமானம் குளத்தில் விழுந்தது. மற்றொன்றில் வால்பகுதி மட்டும் சேதமடைந்து பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தின் பைலட் தாக்கப்படுவதற்கு முன்னதாகவே அதிலிருந்து வெளியேறி கிரீன்ஹவுஸில் தரையிறங்கினர். அதில் அவருடைய கால்கள் முறிந்ததுடன், வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருந்தது.

இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட இராணுவ புலனாய்வு அமைப்பு வியாழக்கிழமையன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. விபத்தின் போது இரண்டாவது பைலட்டின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், அன்றைய தினம் வானிலை நிலைமைகள் நன்றாக இருந்தன. இரு விமானங்களும் சரியான நிலையில் இருந்தன என கூறப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers