வெளிநாட்டில் 2 வருடங்களாக சித்திரவதைக்கு உள்ளான சுவிஸ் நபர்: வெளியான அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

டொமினிக்கன் குடியரசு நாட்டில் மனைவி மற்றும் அவரது மகனால் நீண்ட 2 ஆண்டு காலம் கொடும் சித்திரவதைக்கு உள்ளானதாக சுவிஸ் நாட்டவர் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

பொலிசாரால் மீட்கப்பட்ட நிலையில், தமது பணத்திற்கு ஆசைப்பட்டு தம்மை தனி அறையில் பூட்டிவைத்து சித்திரவதை செய்துள்ளதாக அவர் புகார் அளித்துள்ளார்.

சுவிஸ் நாட்டவரான குறித்த நபருக்கு சொந்தமாக நிலம் மற்றும் கால்நடைகள் வாங்குவதற்காக அவரது குடும்பத்தாரால் பணம் திரட்டி அனுப்பப்பட்டதாகவும்,

ஆனால் மனைவியும் அவரது மகனும் மொத்த பணத்தையும் பறித்துக் கொண்டதுடன், ஜன்னல் ஏதும் இல்லாத அறையில் தம்மை பூட்டிவைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டுமின்றி உயிரிழந்துவிடாமல் இருக்கவே அவர்கள் தமக்கு உணவு அளித்ததாகவும், ஒரு வேளை மட்டும் அளிக்கப்பட்டும் உணவை சாப்பிட்டு தாம் கடந்த 2 ஆண்டுகளாக உயிர் தப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில், தமது மனைவியும் மகனும் கத்தியால் தாக்கியதாகவும், பலமுறை கொடூர தாக்குதலுக்கு இரையானதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சுவிஸ் அதிகாரிகளை தொடர்புகொள்ள இருப்பதாகவும், சிகிச்சைக்கு பின்னர் சுவிஸ் திரும்புவது தொடர்பில் முடிவெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...