சுவிஸை உலுக்கிய மூன்று கொலைகள்... தடுமாறும் விசாரணை: 30,000 பிராங்குகள் வெகுமதி அறிவிப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 5 ஆண்டுகள் இடைவெளியில் ஒரேபோன்று இருவரை கொலை செய்துவிட்டு தப்பிய நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

கொலை நடந்த இரு பகுதியில் இருந்தும் சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ ஒருவரது என தெரியவந்துள்ள நிலையில், குற்றவாளியை கைது செய்வதில் பொலிசார் திணறி வருகின்றனர்.

இதனையடுத்து குற்றவாளி தொடர்பில் தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதியாக 30,000 பிராங்குகள் வழங்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.

சூரிச் மண்டலத்தில் உள்ள Seefeld மாவட்டத்தில் கணவருடன் குடியிருந்து வந்த 56 வயதான உளவியல் நிபுணர் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் நடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர், அதே டிசம்பர் 15 ஆம் திகதி Laupen பகுதியில் குடியிருந்து வந்த 64 வயது உளவியல் நிபுணரும் அவரது 74 வயது கணவரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

இந்த மூன்று கொலைகள் நடந்த பகுதியில் இருந்தும் சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரிகள் ஒருவரது என தெரியவந்துள்ள நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர்,

கொலைகாரனின் பெயர் Bloss எனவும், ஆனால் அந்த நபர் தொடர்பில் இந்த நாள் வரை எவருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை என கூறப்படுகிறது.

மட்டுமின்றி குற்றவாளி தொடர்பில் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் பொலிசாரால் மேற்கொள்ள முடியாத நிலையில்,

புதிதாக சாட்சிகளை விசாரிக்க சூரிச் மண்டல பொலிசார் முடிவு செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டது உளவியல் நிபுணர்கள் என்பதால்,

அந்த நபர் இவர்களிடம் சிகிச்சை பெற்றாரா? அந்த நபரின் ரகசியங்கள் ஏதேனும் அறிந்ததால் இவர்கள் கொல்லப்பட்டார்களா என்பது தொடர்பில் ஏதும் நிரூபிக்க முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers