சட்ட விரோதமாக சுவிட்சர்லாந்தில் குடியேறியவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து ஒரு நல்ல செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜெனீவாவில் முறையான ஆவணங்கள் இன்றி வாழும் 2,000 அகதிகளை முறைப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 3,500ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

‘Papyrus’ என்ற திட்டத்தின் கீழ், 1,846 சட்ட விரோத அகதிகளுக்கு B வாழிட உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

உரிமம் வழங்கப்பட்டவர்களில் 365 குடும்பங்களில் உள்ள 566 பெற்றோர்கள், 610 குழந்தைகள், குழந்தையில்லாத 14 தம்பதிகள் மற்றும் 642 தனி நபர்களும் அடங்குவர்.

இந்நிலையில் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள அகதிகளில் இன்னும் 1,757பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முறையான ஆவணங்கள் இன்றி மறைந்து வாழும் பலர், குடும்பங்களைப் பிரிந்து, சொந்த நாட்டுக்கும் போக முடியாமல் தவித்து வரும் நிலையை மாற்றும் நல்லெண்ணத்தில்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் 76,000 சட்ட விரோத அகதிகள் இருப்பதாக நம்பப்படும் நிலையில், அவர்களில் 13,000 பேர் ஜெனீவாவில் இருப்பதாக கருதப்படுகிறது.

இவர்களில், முறைப்படுத்தபட்டவர்களில் பெரும்பான்மையோர் (74%) பெண்கள், அதிலும் வீட்டு வேலை செய்வதற்காக லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள்.

விண்ணப்பித்தவர்களில் மிகச் சிலரது விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers