சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் சிறுவர் கடத்தல்: வெளியான பகீர் காரணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 100 சிறார்கள் கடத்தப்பட்டுள்ளதாக புதிய ஆய்வுகள் வெளியாகியுள்ளது.

குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் பெடரல் அரசாங்கம் மேற்கொண்ட ஆய்விலே அதன் முக்கிய காரணமும் வெளியாகியுள்ளது.

மேலும் ஹேக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாகாணங்களில் மட்டும் 68 சிறார்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மாகாணங்களில் இருந்து 35 முதல் 40 சிறார்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் சிறார் கடத்தல் சம்பவமானது கடந்த 10 ஆண்டுகளில் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது 2018 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் திருமணங்கள் அதிகரிப்பும், அதே வேகத்தில் விவாகரத்தும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.

இதனால் தந்தையோ தாயாரோ தங்கள் பிள்ளைகளை சட்டத்திற்கு புறம்பாக ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கடத்துகின்றனர்.

கடந்த 1980 ஆம் ஆண்டு ஹேக் ஒப்பந்தமானது அமுலுக்கு வந்தது. விவாகரத்தால் பிள்ளைகள் கடத்தப்படுவதை தடுக்கவே இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலகின் 85 நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து, தங்கள் நாட்டில் அமுல் படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்