உலகத்தின் முடிவை முன்கூட்டியே அறிவித்த சுவிஸ் பெண்மணி மரணம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

தன்னை கடவுளின் வாய் என்று அழைத்துக் கொண்ட சுவிஸ் பெண்மணி உலகத்தின் முடிவு எப்போது இருக்கும் என்பதை கணித்துச் சொன்னதற்காக புகழ் பெற்றவராவார்.

அத்துடன் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட Uriella என்று அழைக்கப்படும் Erika Bertschinger-Eicke என்ற அந்த பெண் தனது 90ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

1990களில் Fiat Lux என்னும் மத அமைப்பை உருவாக்கியவரான Uriella என்று அழைக்கப்படும் அந்த பெண்மணியை சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 பேர் பின்பற்றினர்.

சூரிச்சில் பிறந்த Uriella, 1973ஆம் ஆண்டு குதிரையிலிருந்து விழுந்தபோது தனக்கு ஞான திருஷ்டி ஏற்பட்டதாக கூறிக்கொண்டார்.

1980ஆம் ஆண்டு Fiat Lux என்னும் மத அமைப்பை உருவாக்கிய அவர், பூமியில் தான் கடவுளின் வாயாக செயல்படுவதாகவும், உலகத்தின் முடிவு எப்போது என்று தனக்கு தெரியும் என்றும் கூறி வந்தார்.

உலகம் அழியும்போது தன்னைப் பின் தொடர்பவர்கள் மட்டும் பறக்கும் தட்டுகளால் காப்பாற்றப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

பின்னர் தன்னைப் பின் தொடர்ந்தவரான ஒருவரிடம் பணம் கேட்டதாகவும், தராவிட்டால், உலகம் அழியும்போது அவர்கள் அழிந்து போய் விடுவார்கள் என்று மிரட்டி, 600,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டார்.

இதேபோல் மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான Uriella தனது 90ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்