சுவிஸ் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய போராளிகள் குழு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் செயல்பட்டுவரும் சுவிஸ் தூதரகம் மீது இடதுசாரி போராளிகள் குழு ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள இடதுசாரி போராளிகள் குழு உறுப்பினர்களை விடுவிக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுவிஸ் தூதரகம் மீது இடதுசாரி போராளிகள் குழு தாக்குதலில் ஈடுபட்டதை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

மேலும் தூதரக அதிகாரியை மிரட்டியுள்ள அந்த கும்பல் துண்டு பிரசுரங்களை வீசிவிட்டு சென்றுள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும், பாதிப்பு தொடர்பில் ஏதும் தகவல் வெளியாகவில்லை எனவும் கூறப்படுகிறது.

சமீப காலமாக சுவிஸ் நிறுவனங்கள் மீது குறிப்பிட்ட சில கும்பல்கள் தாக்குதல் நடத்திவருவது அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தூதரக அதிகாரிகளுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிரேக்கத்தில் உள்ள இடதுசாரி அரசாங்கம் வாக்குவங்கி அரசியல் நடத்துவதால் இதுபோன்ற தன்னிச்சையாக செயல்படும் குழுக்களை கட்டுப்படுத்துவதில்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers