சுவிட்சர்லாந்தில் ஆளுயர மாமிச துண்டை தேடும் பொலிசார்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஆளுயர மாமிச துண்டு ஒன்றை பார்ப்பவர்கள் உடனடியாக அதைக் குறித்து பொலிசாரிடம் தகவலளிக்குமாறு சுவிஸ் பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பொலிசார் Zug பகுதியில் ஒரு ஆளுயர மாமிச துண்டு ஒன்று காணாமல் போய் விட்டதாகவும், அதைக் கண்டுபிடிப்போர் சமைக்காமல் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளிக்குமாறும் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த ட்வீட்டில், உங்கள் உதவி எங்களுக்கு தேவை, சில நாட்களுக்கு முன் அந்த கட்லெட் கடத்தப்பட்டு விட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைக் கண்டுபிடித்தால் சமைக்காதீர்கள், பொலிஸ் வரும் வரை அதை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.

காரணம் அது ஒரு உண்மையான மாமிச துண்டு அல்ல, அது விளம்பரத்திற்காக ஹோட்டல் ஒன்றின் முன் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்கால் ஆன மாமிச துண்டு ஆகும்.

2014ஆம் ஆண்டிலும் ஒருமுறை 1000 ஃப்ராங்குகள் மதிப்புள்ள 2 மீற்றர் உயர பிளாஸ்டிக் சாஸேஜ் ஒன்று திருடு போய் விட்டது.

பின்னர் சில மாதங்களுக்குப்பின் Thur நதியில் அந்த சாஸேஜ் மிதந்து கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers