வெளிநாட்டு சிறையில் தவிக்கும் சுவிஸ் இளம்பெண் விடுத்த உருக்கமான கோரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்ட சுவிஸ் இளம்பெண் தற்போது சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் லாசன்னே மண்டலத்தை சேர்ந்த குறித்த இளம்பெண் தற்போது சிறியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கான சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமது கணவருடன் இணைந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த பெண் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்தார்.

ரஷ்யா மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளின் உதவியுடன் சிரியா மற்றும் ஈராக் ராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் ஐ.எஸ் அமைப்பு வீழ்ச்சி அடைந்தது.

இந்த நிலையில் எஞ்சிய ஐ.எஸ் அமைப்பினர்கள் பலர் சிரியா மற்றும் ஈராக்கிய ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

அதில் பலர் தற்போது விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் லாசன்னே மண்டலத்தை சேர்ந்த இளம்பெண்ணும் சிரியா சிறையில் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

இதனிடையே தாம் சுவிட்சர்லாந்து திரும்ப ஆசைப்படுவதாகவும், அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அவரது கோரிக்கை தொடர்பில் இதுவரை சுவிஸ் அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers