சுவிட்சர்லாந்தில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்: அதிர்ச்சியில் உறவினர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் காருக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரிச் மண்டலத்தின் Dübendorfer பகுதியில் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 29 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மண்டல பொலிசார் மீட்டுள்ளனர்.

புதனன்று பகல் குறித்த பெண்ணின் அண்டை வீட்டார் ஒருவர் கார் நிறுத்தும் இடத்திற்கு சென்ற போது, ஒரு காருக்கு வெளியே பெண்ணின் கால் ஒன்று தெரிந்துள்ளது.

உடனடியாக என்ன பிரச்னை என தெரிந்து கொள்ளும் நோக்கில் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்த அவர், மரணமடைந்த அந்த பெண் தொடர்பில் தமக்கு அதிகமாக எதுவும் தெரியாது எனவும், ஆனால் மிகவும் எளிமையான நபர் எனவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் இது கொலைச் சம்பவம் எனவும், அடித்துக் கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிசார், ஆனால் விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதி மக்களை விசாரித்ததில், கலை 6 முதல் 7 மணி வரையான நேரத்தில் பலத்த சத்தமுடன் ஏதோ ஒன்று மோதுவது போலவும் தொடர்ந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மரணமடைந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது தாயாரும் குறித்த தகவல் கேட்டு அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers