செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள ஒரு நீச்சல் குளம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஒரு பிரபல ரிசார்ட்டிலுள்ள ஒரு நீச்சல் குளத்தில் செல்பி எடுப்பதற்கு பகுதி நேர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுவிட்சர்லாந்திலுள்ள Bürgenstock ரிசார்ட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அழகான நீச்சல் குளத்தில் குளிக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு, அங்கு வரும் மற்றவர்கள் செல்பி எடுப்பது தொந்தரவாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளதையடுத்து மொபைல் போன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Lucerne நதிக்குமேல் அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளம் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவேற்றுவோரிடையே மிகப்பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அந்த ரிசார்ட் செல்பி எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புதிய திட்டத்தின்படி, மூன்று வயதுக்கு மேல் உள்ள சிறுவர்களுக்கும், மொபைல் போன்களுக்கும் காலை 7 முதல் 12 மணி வரையிலும், மாலை 7 முதல் 9 மணி வரையிலும் மட்டுமே அனுமதி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அந்த ரிசார்ட்டிற்கு வருவோருக்கு ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...