அன்று கேரளாவில் பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தை! இன்று சுவிஸ் பிரபலம்: யார் அவர்?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கேரளாவைச் சேர்ந்த அனுசூயா என்ற ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தையை நன்றாக வளர்க்கக்கூடிய ஒரு குடும்பத்திடம் இவனை ஒப்படைத்துவிடுங்கள் என்று மருத்துவமனை அலுவலர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் அனுசூயா என்ற அந்த பெண்.

அந்த குழந்தையை அப்போது கேரளாவிலிருந்த Fritz மற்றும் Elizabeth Gugger என்னும் ஜேர்மன் தம்பதி தத்தெடுத்து வளர்த்தனர்.

Niklaus “Nik” Samuel Gugger என்னும் அந்த குழந்தை இன்று சுவிட்சர்லாந்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.

அவருக்கு நான்கு வயதாகும்போது சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்தது அவரது குடும்பம்.

படிப்படியாக கற்று முன்னேறிய Nik, EPP கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் Winterthurஇல் வாழ்ந்து வரும் Nickஇன் மனம் இன்னும் கேரளாவையே சுற்றி வருகிறது.

கேரளாவுக்கு இன்னும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் உதவிகள் செய்து வரும் Nikக்கு, தன் தாய் கிடைக்கமாட்டாரா என்ற ஏக்கம் இன்னும் நிறையவே இருக்கிறது.

Nikஐ தத்தெடுக்கும்போது, அவரது தாயைக் கண்டுபிடிக்கும் வகையில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்திருந்தனர் Fritz மற்றும் Elizabeth Gugger தம்பதி.

இன்னும் அந்த விளம்பர காகிதத்தை தன் கையில் வைத்திருக்கும் Nick, தொடர்ந்து தன் தாயைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers