குரங்குகளுக்கு அடிப்படை உரிமை வழங்கப்பட வேண்டும்! சுவிட்சர்லாந்தில் ஒரு வித்தியாசமான வாக்கெடுப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

குரங்குகளுக்கும் அடிப்படை உரிமைகள் வழங்கப்படக் கோரி சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்தின் பேஸல் பகுதியில், விலங்குகளுக்கு பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராக வாக்கெடுப்பு ஒன்று நடத்தும் திட்டம் முன்வைக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தின் வலிமையான பார்மசூட்டிக்கல் தொழில்துறை அமைந்திருக்கும் பேஸலில் இந்த திட்டம் முன்வைக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான குரங்குகள் உயிரிழப்பது தடுக்கப்படலாம்.

2016ஆம் ஆண்டு, விலங்குகள் நல அமைப்பு ஒன்று, குரங்குகளாலும் திட்டமிட முடியும், நிகழ்வுகளை நினைவில் வைக்க முடியும், வலியையும் உணர்வதோடு தனது உணர்வுகளையும் மற்ற விலங்குகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும், மற்றும் அவை புத்திசாலித்தனம் மிகுந்தவை என்பதால் அவற்றிற்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்று கோரி திட்டம் வரைவு ஒன்று முன்வைக்கப்பட்டது.

போதுமான கையெழுத்துக்கள் பெறப்பட்ட நிலையிலும், அது விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான சுவிஸ் அரசியல் சாஸனத்துடன் முரண்படுகிறது என்று கூறி, அந்த வரைவு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நீதிமன்றம் ஒன்று, அந்த வரைவு மீதான தடையை நீக்கியுள்ளது. என்றாலும் விலங்குகள் நலன் என்பது சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் அரசு தொடர்பான விடயம் என்பதால், பேஸலுக்கு பார்மசூட்டிக்கல் நிறுவனங்கள் மீது விலங்குகள் நலன் தொடர்பாக தடைகளை விதிக்க அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், தனது சொந்த நிறுவனங்களில் வேண்டுமென்றால்,விலங்குகள் நலன் தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டது.

எப்படியும், வரைவு வாக்கெடுப்புக்கு விடப்படுவதில் எந்த தடையும் இல்லை என்று அனுமதியளித்துவிட்டதால் தற்போது அந்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்