சுவிஸ் பாடகரின் நெகிழ வைத்த புகைப்படம்... தாயார் ஒருவரின் கண்ணீர் கதை: குவிந்த ஆதரவு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பிரபல பாடகர் LCone வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் பகுதியை சேர்ந்த பிரபல பாடகர் LCone தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தமது வங்கிக்கணக்கில் 28.80 பிராங்குகள் தொகை மட்டுமே மிச்சமிருப்பது பதிவாகியிருந்தது.

இந்த புகைப்படம் உடனடியாக பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், பலரும் உதவ முன்வந்துள்ளதாக பாடகர் LCone தற்போது வெளியிட்டுள்ளார்.

முகம் தெரியாத பலரும் உணவருந்த அழைப்பு விடுத்துள்ளதாகவும், பணம் அனுப்பட்டுமா என கரிசனத்துடன் விசாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது ரசிகர்களை சந்தோஷப்படுத்தவே தாம் இதுவரை சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்ததாகவும்,

ஆனால் ஒரு மாறுதலுக்காக நேர்மையான ஒரு கருத்தை பதிவு செய்யலாம் என முடிவெடுத்ததன் விளைவே இந்த புகைப்படம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அவருக்கு விடுக்கப்பட்ட உதவிகளை மறுத்த LCone, நாட்டில் என்னை விடவும் உதவி தேவைப்படும் பல பேர் உள்ளனர் எனவும்,

அவர்களுக்கு உதவுங்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டுமின்றி தம்மைப் போன்ற கத்துக்குட்டிகள் பலரும் சுக வாழ்க்கை வாழவில்லை எனவும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், தமது மனதை உலுக்கிய ஒரு சம்பவத்தையும் பாடகர் LCone பதிவு செய்துள்ளார்.

அதில் 2 பிள்ளைகளுக்கு தாயாரான 29 வயது அனிதா என்பவர் தமது குறைவான வாருமானத்தைக் கொண்டு தமது குடும்பத்தை எவ்வாறு முன்னெடுத்து செல்கிறார் என விளக்கியுள்ளார்.

கடந்த 2 வாரங்களாக தமது இரு பிள்ளைகளுக்கும் வெறும் பாஸ்தா உணவை மட்டுமே தம்மால் வழங்க முடிகிறது என அதில் அனிதா குறிப்பிட்டுள்ளார்.

பலர் அவருக்கும் உதவ முன்வந்த நிலையில், அந்த உதவிகளை அனிதா மறுத்துள்ளதாக பாடகர் LCone தெரிவித்துள்ளார்.

கையேந்தும் நிலையில் தாம் இல்லை என்ற போதும், சமூகத்தில் பலர் அரசின் உதவிக்காக காத்திருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers