இலங்கை வந்த சுவிஸ் நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Report Print Murali Murali in சுவிற்சர்லாந்து

சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயன்ற உல்லாச விடுதி ஊழியரை, வெள்ளவாய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண், தனது கணவனுடன் உல்லாச பிரயாணியாக இலங்கை வந்து, வெள்ளவாய பகுதிக்கு சென்று, அங்கு உல்லாச விடுதியொன்றில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், விடுதியின் ஊழியர் குறித்த பெண்ணிடம் பாலியல் வல்லுறவினை மேற்கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அப் பெண் இனங்காமையினால், விடுதி ஊழியரின் முயற்சி தோல்வியுற்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பெண் தனது கணவனிடம் விடயத்தைக் கூறி, வெள்ளவாய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டை அடுத்து விடுதியின் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...