தங்கள் பிரதிநிதிகள் குறித்து ஒரு முக்கிய விடயத்தை அறிய விரும்பும் மக்கள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் மக்கள், அவர்களைக் குறித்த ஒரு முக்கிய விடயத்தை அறிந்து கொள்ள விரும்புவதாக தெரியவந்துள்ளதையடுத்து சுவிஸ் நாடாளுமன்றத்தில் அது தொடர்பான வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.

அது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனேட்டர்களின் இரட்டைக் குடியுரிமை குறித்த விடயம்.

சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான Marco Chiesa கொண்டுவந்த ஒரு மசோதாவின் மீது இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படுதல் தொடர்பான சட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனேட்டர்கள் வைத்திருக்கும் பாஸ்போர்ட் குறித்த தகவல்களை வெளியிடும் அளவுக்கு விஸ்தீரணம் செய்யப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

இதன்படி, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களைக் குறித்த வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் வகையில், தங்கள் பாஸ்போர்ட்கள் குறித்த விவரங்களை வெளியிட கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

நேற்று நாடாளுமன்றத்தின் மேல் சபை மற்றும் கீழ் சபையின் கூட்டு கமிட்டி இந்த மசோதவுக்கு ஆதரவாக வாக்களித்தது.

தான் கொண்டு வந்த மசோதாவில், Chiesa, முக்கிய விடயங்கள் குறித்து வாக்களிப்பதில், இந்த விடயம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் குடியுரிமை குறித்து அறிந்து கொள்ள வாக்காளர்கள் விரும்புவதாகவும், அதனாலேயே இந்த மசோதாவை முன்வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட்களை வைத்துக் கொண்டு, ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமையை அனுபவித்து வரும் சில செனேட்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மேற்கோள் காட்டி அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இனி இந்த மசோதா சுவிஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers