அடிமை போன்று வேலை வாங்கிய சுவிஸ் உணவகம்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இந்தியர் ஒருவர் தொடர்ந்த இன பாகுபாடு வழக்கை சுவிஸ் பெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் Dietikon, Langenthal மற்றும் Interlaken பகுதிகளில் துரித உணவகங்களை நடத்தி வந்துள்ளார் சீக்கிய மத நம்பிக்கை கொண்ட இந்தியர் ஒருவர்.

இவரது உணவகங்களில் பெரும்பாலும் கிழக்கு ஐரோப்பியர்கள் ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு குறித்த உணவகம் தொடர்பில் சுவிஸ் நாளேடு ஒன்று 15 நாட்களில் தொடர்ச்சியாக 7 கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

அதில் அந்த உணவகத்தில் பணியாற்றும் கிழக்கு ஐரோப்பிய நாட்டவர்களை அடிமை போன்று வேலை வாங்குவதாகவும், உரிய ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் தமது உணவகம் தொடர்பில் வெளியான அந்த கட்டுரைகளில் தமது மத நம்பிக்கையை கேலிக்குரியதாக குறிப்பிட்டுள்ளதாகவும், இது இன பாகுபாடு என குறிப்பிட்டு சூரிச் பொலிசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

மேலும் குறித்த நாளேடு தமக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.

குறித்த உணவக உரிமையாளரின் புகாரை விசாரித்த சூரிச் மண்டல நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து சுவிஸ் பெடரல் நீதிமன்றத்தை நாடிய அந்த நபர் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பெடரல் நீதிமன்றம், முன்னெடுத்த விசாரணையில், சீக்கியரின் உணவகம் தொடர்பில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் உரிய ஆய்வுக்கு பின்னரே வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் பத்திரிகையாளர்கள் தங்கள் கடைமையை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் அந்த கட்டுரைகளில் மனுதாரரின் மத நம்பிக்கையை குறிப்பிட்டு கேலிக்குரிய வகையில் சித்தரித்தது அந்த சமூக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கண்டித்துள்ளது.

ஆனால் தற்போதைய சுவிஸ் சட்டங்களின் அடிப்படையில் இந்த வழக்கிற்கு தண்டனை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers