உடலுக்குள் எந்த உறுப்பில் நோய் ஏற்பட்டிருக்கிறதோ, அந்த உறுப்புக்குள் சென்று பாதிக்கப்பட்ட இடத்திற்கே மருந்தைக் கொண்டு சேர்க்கும் குட்டி ரோபோக்களை சுவிஸ் அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
உடலின் எந்த உறுப்புக்குள்ளும் ஊடுருவிச் செல்லும் பாக்டீரியங்களைப் பார்த்துதான் அறிவியலாளர்களுக்கு இந்த ஐடியா தோன்றியிருக்கிறது.
இந்த எலாஸ்டிக் ரோபோக்கள் சுற்றுப்புறத்திற்கேற்ப தங்கள் வடிவத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
வரும் காலத்தில் இந்த குட்டி ரோபோக்களை விழுங்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு மருந்தை கொண்டு சேர்ப்பதற்காக அவை பயன்படலாம்.
லாசேன் ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தின் Selman Sakare தலைமையிலான ஒரு குழுவும், சூரிச் ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தின் Bradley Nelson தலைமையிலான ஒரு குழுவும் இணைந்து இந்த குட்டி ரோபோக்களை கண்டுபிடித்துள்ளனர்.
பாக்டீரியங்கள்தான் தங்களுக்கு இந்த குட்டி ரோபோக்களை உருவாக்கும் ஐடியாவைக் கொடுத்ததாக தெரிவிக்கிறார்கள் அவர்கள்.
இந்த ரோபோக்கள் திரவங்கள் வழியாக பயணிக்கக் கூடியவையாகவும், தங்கள் வடிவத்தை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளக்கூடியவையாகவும் இருப்பதால், தங்கள் வேகத்தைக் குறைக்காமலே இரத்தக் குழாய்கள் போன்ற குறுகிய குழாய்கள் வழியாக பயணிக்கக்கூடியவையாகவும் உள்ளன.
இயற்கையில் பல நுண்ணுயிரிகள் தங்கள் சுற்றுச்சூழலுக்கேற்ப தங்கள் வடிவத்தை மாற்றிக் கொள்கின்றன.
அதன் அடிப்படையில்தான் நாங்கள் இந்த குட்டி ரோபோக்களை உருவாக்கியுள்ளோம் என்று கூறும் Nelson, அவற்றில் செய்ய வேண்டிய மாற்றங்களின் பின்னணியிலுள்ள இயற்பியலும், அதை இந்த ரோபோ தொழில்நுட்பத்தில் இணைப்பதும்தான் பெரிதும் சவாலாக இருந்த விடயங்கள் என்கிறார்.