அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக போராடும் நிர்வாண கலைஞர்கள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சூரிச்சில் நடைபெற்ற நிர்வாணக் கலை விழாவில் பங்கேற்ற கலைஞர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் அபராதம் விதித்த நிலையில், அவர்கள் அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

அந்த கலை விழாவின் அமைப்பாளராகிய Zollingerம், இன்னும் ஐந்து கலைஞர்களும் ஒரு புல்வெளியில் வெறுமனே நடந்து கொண்டும், உருண்டு கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருந்தார்கள்.

ஆனால் அந்த நிகழ்ச்சி 45 நிமிடங்களுக்குப் பிறகு தடைபட்டது. சம்பவ இடத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர் பொலிசாரிடம் புகாரளித்ததால், பொலிசார் வந்து அந்த நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

தொப்பி அணிந்திருந்த, அந்த நிலத்தின் சொந்தக்காரரான Schlatter என்பவரைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் 100 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.

நிர்வாணமாக இருப்பது சட்டப்படி குற்றம் இல்லை என்று வாதிடும் Zollinger, அதுவும் கலையுடன் சம்பந்தப்பட்டு நிர்வாணமாக இருப்பது குற்றமே இல்லை என்கிறார். எனவே இந்த பிரச்சினையை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ள அவர்கள், அபராதங்கள் ரத்து செய்யப்படவேண்டும் என்றும், தங்களுக்கு இழப்பீடாக 200 சுவிஸ் ஃப்ராங்குகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

அதேபோல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தங்கள் நிகழ்ச்சி தடை செய்யப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers