சுவிட்சர்லாந்தின் 2019ஆம் ஆண்டிற்கான அதிபர் இவர்தான்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரையில் அதிபர் பதவி என்பது பெயருக்குதான், நாட்டை ஆள்வது ஏழு உறுப்பினர்கள் கொண்ட ஃபெடரல் கவுன்சில் என்னும் அமைப்பு. அந்த கவுன்சிலில் உள்ள ஏழு பேரும் ஆண்டுக்கு ஒருவராக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிபராக தேர்வு செய்யபட்ட அந்த நபர், தூதரக பொறுப்புகளை கவனிப்பதுடன், ஃபெடரல் கவுன்சிலின் கூட்டங்களில் பங்கேற்பதோடு முக்கிய நிகழ்வுகள் தொடர்பான வாக்கெடுப்புகளில் முடிவெடுக்க உதவுவார்.

இந்த ஆண்டு அதிபர் பதவிக்கு Ueli Maurer தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவர் 2016ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பொருளாதார அமைச்சராக பதவி வகித்தவராவார். 68 வயதுடைய அக்கவுண்டண்டான Ueli Maurerக்கு திருமணமாகி ஆறு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

40 ஆண்டுகளுக்குமுன் சூரிச்சின் Hinwil மாகாணத்தின் மேயராக பொறுப்பேற்றதன்மூலம் அரசியலில் நுழைந்தார் Ueli Maurer. Ueli Maurer சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்தவராவார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers