சுவிட்சர்லாந்தில் சொந்த மருமகளையே பாலியல் அடிமையாக பயன்படுத்திய கொடூரன்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் மண்டலத்தில் சொந்த மருமகளையே நபர் ஒருவர் பாலியல் அடிமையாக பயன்படுத்திக் கொண்ட கொடூர சம்பவம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.

போர்த்துகல் நாட்டவரான 46 வயது நபர் சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் மண்டலத்தில் குடியிருந்து வருகிறார்.

இவருடன் வளர்ப்புக்குழந்தையாக இவரது மருமகள் சிறுமி ஒருவரும் வசித்து வந்துள்ளார். குறித்த சிறுமிக்கு 14 வயது இருக்கும் போது இந்த நபர் அவரை பாலியல் அடிமையாக பயன்படுத்திக் கொண்டது நீதிமன்றத்தில் தற்போது நிரூபணமாகியுள்ளது.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தம்முடன் வசித்து வந்த 14 வயது மருமகளிடம் இவர் ஆபாச காணொளிகளை காண்பித்துள்ளார்.

மட்டுமின்றி குறித்த சிறுமியை மிரட்டி, அவரது அந்தரங்க பகுதிகளில் தொடுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

2013 ஆம் ஆண்டு கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்னர் ஒருநாள் டீயில் போதை மருந்தை கலந்து கொடுத்து, இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இது மாதத்தில் சில நாட்கள் என தொடர்ந்து ஓராண்டு காலம் நீடித்துள்ளது. பலமுறை வாய்வழி உறவுக்கும் நிர்பந்தித்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி நீதிபதியிடம் அளித்த ரகசிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை லூசெர்ன் மணடல குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபணமான நிலையில் குறித்த போர்த்துகல் நபருக்கு 4 ஆண்டுகளும் 5 மாதமும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மட்டுமின்றி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 20,000 பிராங்குகள் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்