திகிலில் முடிந்த காதல் ஜோடியின் சாகஸம்: மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பாராகிளைடரில் பறந்த ஒரு காதல் ஜோடி கேபிள் காரில் போய் மோதி சிக்கிக் கொள்ள, கேபிள் காரை இயக்குபவர் சமயோகிதமாக கேபிள் கார் இயக்கத்தை உடனே நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

என்றாலும் சுமார் அரை மணி நேரம் அவர்கள் 1000 மீற்றர் உயரத்தில் கேபிளிலிருந்து அந்தரத்தில் திகிலுடன் தொங்கிக் கொண்டிருக்க நேர்ந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சாகஸப் பயணம் மேற்கொண்ட அந்த ஜோடியின் கிறிஸ்துமஸ் விடுமுறை திகிலுடனும், அவமானத்துடனும் முடிந்தது.

வலாயிஸ் பகுதியின் Lauchernalp ரிசார்ட்டின் கேபிள் கார் நிறுவனத்தின் மேனேஜரான Karl Roth, அந்த ஜோடி பெரிய பிரச்சினையின்றி உயிர் பிழைத்தது அதிசயம்தான் என்கிறார்.

அந்த பாராசூட், கேபிள் காரின் இயந்திரத்தில் சிக்கியிருக்குமானால் நிலைமை மிக மோசமாகியிருக்கும் என்கிறார் அவர்.

பாராசூட்டில் சிக்கிக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்த ஜோடியை, தங்கள் மீட்புக் குழுவினர் கம்பம் வழியாக ஏறிச் சென்று பாராசூட்டை வெட்டி மீட்டதாக தெரிவிக்கும் Karl Roth, அந்த ஜோடி, நடந்ததை எண்ணி அவமானமாக உணர்ந்தாலும், கேபிள் கார் இருக்கும் இடத்திற்கு அருகில் பறந்தது அவர்கள் தவறு என்கிறார்.

அவர்களை மீட்பதற்காக கேபிள் கார் இயக்கத்தை நிறுத்த வேண்டியிருந்தது. இதனால் கேபிள் கார் நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

ஃபெடரல் போக்குவரத்து அலுவலகத்திற்கு புகாரளித்துள்ளோம், அவர்கள் நிறுவனம் இழந்த தொகையை, அந்த ஜோடிக்கு அபராதமாக விதிப்பார்கள் என்றார் Karl Roth.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers