சுவிட்சர்லாந்தில் பார்ட்டிகளுக்கு தடை: இந்த ஆண்டும் தொடரும் ஏமாற்றம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஒன்பது கேன்டன்களில் மதம் சார்ந்த பண்டிகைகளின்போது நடனமாடுவதற்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், Glarus பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த தடையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

பொலிசார், இந்த ஆண்டு, பண்டிகைகளின் போது மட்டுமல்லாமல், பண்டிகை நாட்களுக்கு முந்தின மாலைப் பொழுதுகளிலும் இந்த தடை நீடிக்கும் என கலை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புகளின் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ், புனித வெள்ளி மற்றும் உயிர்த்தெழுதல் பண்டிகைகளின்போது நடத்தப்படும் நடனம், இசை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இரவு விடுதிகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் பார்ட்டிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது, அதுவும் அதிக சத்தம் ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில்.

Glarus பகுதி மக்கள், 600 ஆண்டுகளாக ஆண்டுக்கொருமுறை பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் மக்கள் கூடுகைக்கு இந்த ஆண்டு அனுமதி கோரி நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மன் மொழி பேசும் எட்டு கேன்டன்களில் நடனமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்னமும் தொடர்கிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers