இனவாத கருத்துக்களை பரப்பிய மூவர்: சுவிஸ் பொலிசார் அதிரடி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

இனவாத கருத்துகளை கொண்ட இணையதளம் ஒன்றை செயல்படுத்தி வந்த இளைஞர்கள் மூவரை சுவிஸ் பொலிசாரின் உதவியுடன் Europol அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெயின் நாட்டவர்களான அந்த மூவரையும் சுவிட்சர்லாந்தில் வரவழைத்து விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.

கைதான மூவரும் யூத எதிர்ப்பு, இனவெறியை தூண்டுதல் மற்றும் இனவாத கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் இணையவழி நாளேடு ஒன்றின் ஸ்பானிய மொழிபெயர்ப்பையே இந்த மூவரும் வெளியிட்டு வந்துள்ளனர்.

அடால்ஃப் ஹிட்லரின் தீவிர ஆதரவாளர்களான இந்த மூவரும் பெண்ணியவாத அமைப்புகளையும், ஒருபாலின மக்களையும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

கைதான மூவரில் 29 வயதான ஸ்பெயின் நாட்டவருக்கு 50,000 சந்தாதாரர்கள் கொண்ட ஒரு இணைய பக்கமே செயற்பாட்டில் இருப்பதாகவும்,

சுவிட்சர்லாந்தில் இவருடன் சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஸ்பெயின் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த மூவர் மீதான நடவடிக்கையானது யூரோபோல் மற்றும் சுவிஸ் பொலிசார் ஒன்றிணைந்து நடத்தியுள்ளனர்.

கைதான மூவரும் பொய்யான முகவரி மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி இந்த இனவாத கருத்துக்களை பரப்பி வந்துள்ளதாக ஸ்பெயின் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா, தாராகோனா மற்றும் ஸராகோஸா ஆகிய நகரங்களில் இருந்து இவர்கள் மூவரையும் திட்டமிட்டு கைது செய்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers