சுவிட்சர்லாந்தில் இதுதான் முதல் முறை! பாதுகாப்புத் துறை அமைச்சரான பெண்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் முதல் பெண் பாதுகாப்பு துறை அமைச்சராக Viola Amherd தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸில் ஏழு உறுப்பினர்களை கொண்ட பெடரல் கவுன்சிலுக்கான தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்களை நியமித்தது.

அதன்படி Simonetta Sommaruga ஆற்றல், சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு ஆகிய துறைகளுக்கும், Guy Parmelin பொருளாதாரத் துறைக்கும், Karin Keller-Sutter நீதித்துறைக்கும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Ueli Maurer நிதித்துறை அமைச்சராகவும், Ignazio Cassis வெளியுறவுத்துறை அமைச்சராகவும், Alain Berset உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்பு துறைக்கு அமைச்சராக Viola Amherd தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்த துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை Amherd பெற்றுள்ளார்.

அடுத்த ஆண்டு 1ஆம் திகதி முதல், இவர் பாதுகாப்பு துறை அமைச்சராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

AFP

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers