சைவ சாலடுக்குள் கிடந்த தவளை: வித்தியாசமாக யோசித்த வாடிக்கையாளர்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் உணவகம் ஒன்றில் சாலட் சாப்பிட வந்த ஒருவர், உணவக ஊழியர் கொண்டு வந்த சாலடைக் கண்டு அதிர்ந்தார்.

Baselஐ சேர்ந்த ஒருவர் பிரபல உணவகமாகிய Migrosஇல் சாலட் ஒன்றை ஆர்டர் செய்தார். உணவக ஊழியர் கொண்டு வந்த சாலட் கவரைக் கண்ட அந்த நபர் அதற்குள் உயிருடன் ஒரு தவளை குதித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அதைக் குறித்து புகார் தெரிவிப்பதற்கு பதிலாக, அந்த கவருடன் நடந்த அவர் அந்த தவளையைக் கொண்டுபோய் காட்டுப்பகுதியில் விட்டு வந்தார்.

Migros உணவகம் அந்த வாடிக்கையாளரிடம் மன்னிப்புக் கோரியதோடு, சாலடுகளில் சேர்க்கப்படும் இலைகளைக் கழுவும்போது பொதுவாக விலங்குகள் எல்லாம் நீக்கப்படுவதை உறுதி செய்து கொள்வதுண்டு என்று கூறியுள்ளது.

அத்துடன் புகார் செய்வதற்கு பதிலாக தவளையை பத்திரமாக காட்டுப்பகுதியில் கொண்டு விட்ட அவரது இரக்க குணத்திற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...