சுவிஸில் புயல் காரணமாக பனிச்சரிவு ஏற்படும் ஆபத்து: நிபுணர்கள் எச்சரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் Marielou புயல் காரணமாக பனிச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மலைப்பிரதேசங்களில் மணிக்கு 165 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும், தாழ்வான பகுதிகளில் காற்றின் தாக்கம் குறைவாக இருக்கும் என்றாலும் மணிக்கு 80 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு இரவு கிழக்கு சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் Marielou புயல் தாக்கக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மட்டுமின்றி புயல் காரணமாக பனிச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

சில பகுதிகளில் பலமான காற்று வீசியது காரண்மாக மரங்கள் வேருடன் சாந்துள்ளன. அந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers