மிரட்டும் ஐரோப்பிய ஒன்றியத்தை அலட்சியப்படுத்திய சுவிட்சர்லாந்து

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

நான்காண்டு கடின பேச்சுவார்த்தைகளுக்குப்பின் முக்கிய வர்த்தகம் மற்றும் எல்லை தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடாமல், காலக்கெடு விதித்த நிலையிலும், ஐரோப்பிய ஒன்றியத்தை சுவிட்சர்லாந்து அலட்சியப்படுத்தியுள்ளது.

அந்த ஒப்பந்தம் டிசம்பர் மாதத்திற்குள் கையெழுத்தாகிவிடும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்பியிருந்த நிலையில், சுவிட்சர்லாந்து, 2019ஆம் ஆண்டு இளவேனிற்காலம் வரையிலும் பேச்சு வார்த்தையை தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் அல்லாத நாடுகளுடன் செய்யப்படும் அந்த ஒப்பந்தம் மக்களின் தடையற்ற போக்குவரத்து, விமானப்போக்குவரத்து, நிலப்போக்குவரத்து,தொழிலக பரஸ்பர அங்கீகாரம் மற்றும் பதப்படுத்தப்பட்ட பண்ணைப் பொருட்கள் என்னும் ஐந்து விடயங்களை மையமாகக் கொண்டு செய்யப்படுவதாகும்.

அந்த ஒப்பந்த்தத்தின்படி சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தை விதிகளை ஏற்றுக்கொள்வதோடு, அதன்மூலம் எழக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிறந்த வழிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

நான்காண்டுகளாக அந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அது இன்று கையெழுத்தாகி இருக்க வேண்டும்.

ஆனால், மலிவான அந்நிய சந்தையிடமிருந்து சுவிஸ் சந்தையை பாதுகாப்பது தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

சுவிஸ் தரப்பு அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தக யூனியன்கள் இது குறித்து அச்சம் கொண்டுள்ள நிலையில் உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இயலாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து தங்கள் முக்கிய கோரிக்கைகளுக்கு சம்மதிக்காவிட்டால், பொருளாதார ரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற உள்ள பிரித்தானியாவுடன் என்ன ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது அறிந்து கொள்ள விரும்புவதால், சுவிஸ் நாட்டவர்கள் பலரும் என்ன நடக்கிறது என்பதை பார்க்க காத்திருப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers