மாயமான சுவிஸ் நாட்டவருக்கு ஏற்பட்ட துயரம்: மீட்பு குழுவினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மாயமான 90 வயது பெண்மணியை மீட்பு குழுவினர் சடலாமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Uetliberg பகுதியில் கடந்த நவம்பர் 22 ஆம் திகதி முதல் குறித்த பெண்மணி மாயமானதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 30 பொலிசார் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட மீட்பு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் வெள்லியன்று தேடப்படும் அந்த 90 வயது பெண்மணி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 22 ஆம் திகதி Uetliberg பகுதியில் நடைபயணம் மேற்கொள்ளும் குழுவுடன் குறித்த பெண்மணியை கடைசியாக கண்டுள்ளனர்.

அன்று இரவு 11 மணியளவில் ஓய்வு எடுப்பதாக கூறி சாலை ஓர இருக்கை ஒன்றில் அமர்ந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

மேலும், குறித்த குழுவுடன் மலைப்பகுதி உணவு விடுதி ஒன்றில் பின்னர் இணைந்து கொள்வதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

ஆனால் குறித்த உணவு விடுதியில் அவர் சென்று சேரவில்லை என்றே அந்த குழுவினர் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.

ஒருவார காலம் 30 பொலிசார் கொண்ட குழுவினர் மோப்ப நாய்களுடன் தேடுதலில் ஏற்பட்ட நிலையில், அவர்களால் மாயமான பெண்மணியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து அவர்கள் தேடுதல் பணியை கைவிட்டனர். இந்த நிலையிலேயே Uetliberg பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers