சுவிட்சர்லாந்து பள்ளியை உலுக்கிய இரட்டை தற்கொலை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்திலுள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் ஒரு மாணவனும் மாணவியும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Fribourgஇல் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் 16 வயது மாணவன் ஒருவன் ரயிலின் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

அவனது இறுதிச் சடங்கு முடிந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், அவனது காதலியான ஒரு 16 வயது மாணவியும் அதே இடத்தில் ரயிலின் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டாள்.

அந்த மாணவிக்கு ஏதாவது உதவியிருக்கலாமோ என்று இப்போது அவர்களது வகுப்பு தோழர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் அந்த மாணவர்களின் பெற்றோரோ, எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி ஊழியர்களை குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers