சுவிஸில் பொலிசாருக்கு அழைப்பு விடுத்து தண்ணி காட்டிய நபரால் பரபரப்பு!

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் St. Gallen மணடலத்தில் நபர் ஒருவர் பொலிசாருக்கு அழைப்பு விடுத்து குடியிருப்புக்குள் ஒளிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

St. Gallen மணடலத்தில் உள்ள Dicken பகுதியில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திடிரென்று மண்டல பொலிசாருக்கு நபர் ஒருவர் அவசர உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார், அந்த குடியிருப்புக்குள் நுழைய முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர்.

குறித்த நபர் ஏதோ அபாயத்தில் இருக்கிறார் என்பது மட்டும் உறுதி என கூறியுள்ள மண்டல பொலிசார், அவரது குடியிருப்புக்கு வெளியே இரண்டு நாய்கள் இருப்பதால், அவற்றைக் கடந்து குடியிருப்புக்குள் பொலிசாரால் செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது.

மட்டுமின்றி அந்த குடியிருப்பில், உதவி கேட்டு அழைப்பு விடுத்த நபர் மட்டுந்தானா அல்லது அவரது உதவிக்கு ஆட்கள் உள்ளனரா என்பது தொடர்பில் எந்த தகவலும் இல்லை என கூறப்படுகிறது.

இதனிடையே நாய்களை கட்டுப்படுத்தும் குழுவையும் பொலிசார் உதவிக்கு அழைத்துள்ளனர். இதில் ஒரு நாய் பொலிஸ் அதிகாரி மீது பாய்ந்து தாக்க முற்பட்டுள்ளது.

தற்போது 4 பொலிஸ் வாகனங்கள் மற்றும் அவசர மருத்துவ உதவி வாகனங்கள் என அந்த குடியிருப்பை சுற்றி வளைத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...