மனைவியை தவிக்க விட்டு வேறு நாட்டுக்கு சென்ற கணவன்: இரண்டாம் திருமணம் செய்த திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு, நைஜீரியாவுக்கு சென்று வேறு பெண்ணை திருமண செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எலிசபெத் எடிடீ என்ற இளம் பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், அன்பான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் வணக்கம், நான் தற்போது தவித்து கொண்டிருக்கிறேன்.

என் பெயரின் உரிமைகளுக்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் போராடி வருகிறேன்.

என் கணவர் அஜிபாய் என்னை சுவிஸில் தவிக்க விட்டு, நைஜீரியாவுக்கு சென்று வேறு பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்துள்ளார்.

உங்களின் பிரார்த்தனையில் என் பெயரையும் சேர்த்து கொள்ளுங்கள்.

இதே போன்று பெண்களை பின் தொடர்ந்து அவர்களை கவரும் வேலையை தான் நைஜீரியாவிலும் அவர் செய்து வந்தார் என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவானது மிக வைரலாகி வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers