சுவிட்சர்லாந்தின் பில்லியனர்கள் பட்டியல் வெளியானது: முதலிடத்தில் யார் தெரியுமா?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பில்லியனர்கள் பட்டியலில் 51 பில்லியன் பிராங்குகளுடன் முதலிடத்தில் Family Kamprad உள்ளது.

சுவிட்சர்லாந்தின் பில்லியனர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 300 பேர் கொண்ட இந்த பட்டியலில் முதலிடத்தை IKEA குழுமத்தின் Kamprad சகோதரர்கள் தக்கவைத்துள்ளனர்.

கடந்த ஆண்டை விடவும் இந்த 300 பேரின் சொத்துமதிப்பு அதிகரித்திருந்தாலும் எதிர்பார்த்தபடி இல்லை என்றே கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக இந்த 300 பில்லியனர்களின் சொத்துமதிப்பு 675 பில்லியன் பிராங்குகள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் 300 பேரும் தனித்தனியாக ஆண்டுக்கு சுமார் 2,251 மில்லியன் வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டை விடவும் இந்த முறை சுவிஸ் செல்வந்தர் ஒருவர் சராசரியாக 1.7 பில்லியன் பிராங்குகள் அளவுக்கு வருவாயை அதிகரித்திருந்தாலும் அது குறைவாகவே கருதப்படுகிறது.

இந்த 300 பில்லியனர்களும் கூட்டாக தங்கள் சொத்துக்களை சுவிஸ் குடிமக்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு எடுப்பார்கள் எனில், தனி மனிதர் ஒருவருக்கு சுமார் 79,400 பிராங்குகள் வரை கி8டைக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

சுவிட்சர்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் இந்த 300 செல்வந்தர்களின் சொத்துமதிப்பு 3 மடங்கு வேகத்தில் வளர்ச்சியை எட்டுவதாக கூறப்படுகிறது.

சுவிஸின் டாப் 10 பில்லியனர்களின் மொத்த சொத்துமதிப்பு 203 பில்லியன் பிராங்குகள் எனவும், இந்த ஆண்டு மட்டும் இந்த 10 பேரும் 2 பில்லியன் பிராங்குகள் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் டாப் 10 பில்லியனர்கள்:

  • Family Kamprad - CHF 50-51 billion
  • Hoffmann and Oeri families - CHF 25-26 billion
  • Jorge Lemann - CHF 21-22 billion
  • Family Safra - CHF 19-20 billion
  • Gérard Wertheimer - CHF 18-19 billion
  • family Brenninkmeijer - CHF 15-16 billion
  • Family Bertarelli - CHF 13-14 billion
  • Charlene de Carvalho-Heineken - CHF 13-14 billion
  • Jacobs family - CHF 12-13 billion
  • Families Schindler and Bonnard - CHF 12-13 billion

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...