சுவிஸ் பல்கலைக்கழகத்திற்காக எடுக்கப்பட்ட விளம்பர வீடியோ: கிடைத்த எதிர்பாராத ரெஸ்பான்ஸ்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகம் ஒன்றை புரமோட் செய்யும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரம், எதிர்பார்த்ததற்கு மாறாக மாணவர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

சூரிச்சிலுள்ள ETH பல்கலைக்கழகம், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்தாலும், அதை புரமோட் செய்யும் வகையில் வெளியாகியுள்ள, ராப் பாடலுடன் பல்கலைக்கழகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வீடியோவுக்கு பல்வேறு வகையான ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

மூன்று மாணவர்கள் ராப் செய்யும் அந்த வீடியோவில் சூரிச் நகரத்தின் மற்றும் ETH பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பல நல்ல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. வாய்ப்புகளை அள்ளி வழங்கும் சூரிச் நகரத்திற்கு உங்களை வரவேற்கிறோம் என்று தொடங்கும் அந்த பாடல், சீஸை எந்த அளவிற்கு விரும்புகிறோமோ அந்த அளவிற்கு சுதந்திரத்தையும் விரும்புகிறோம் என்கிறது.

ஒரு பக்கம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இன்னொரு பக்கம் பல்கலைக்கழக மாணவர்களே அதை கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.

ETH பல்கலைக்கழகம் சமீபத்தில் கல்விக் கட்டணத்தை 500 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து 1160 ஃப்ராங்குகளாக உயர்த்த இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்களை இந்த வீடியோ எரிச்சலூட்டியுள்ளது.

நன்றி ETH, ஒன்றும் செய்யாததற்காக, மேலும் எங்கள் அதிகரிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை இப்படி வீணாக்குவதற்காக, என்று ஒரு மாணவர் கருத்து தெரிவித்திருந்தார்.

கடவுளே, இதற்காகவா நான் செமஸ்டர் பீஸ் கட்டுகிறோம், மாணவர்களின் கட்டணத்தை அதிகரித்துவிட்டு, இப்படி பணத்தை வீணாக்குவதற்காக ரொம்ப நன்றி என்கிறார் இன்னொரு மாணவர்.

இன்று வரையில் 100,000 பேர் பார்த்துள்ள அந்த வீடியோவுக்காக 160,000 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிடப்பட்டுள்ளது என்பது அழுத்தமாக குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers